tamilnadu

தனியார் கொள்ளைக்கு சுங்கக் கட்டண உயர்வா? பாஜக அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை, ஆக. 28 - தனியாரின் கொள்ளை லாபத்திற்காக, தமிழகத்தின் 25 சுங்கச் சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வை அறி வித்துள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலி யுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், செவ்வா யன்று (ஆக. 27) சென்னையில் நடை பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ஏழை - எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதல்!

தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடி களில் செப்டம்பர் 1 முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ. 5 முதல் ரூ.  150 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படு கிறது. ஏற்கெனவே பல மடங்கு கட்டண உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது, மேலும் தாக்குதல் தொடுக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு அமைந்துள்ளது. 

இந்த சுங்கக் கட்டண உயர்வால், கனரக வாகனங்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகளும் உயரும் சூழலை ஏற்படுத்தி, ஏழை, எளிய,  நடுத்தர மக்கள் மீது கொடும் தாக்குதல் களை ஒன்றிய பாஜக அரசு தொடுத்துள்ளது.

சட்டவிரோதக் கொள்ளை; பல்லாயிரம் கோடி ஊழல்!

சுங்கக் கட்டணம் மிகப் பெரிய வரு மானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. பல இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் காலாவதியான சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலித்து சட்ட விரோதமாக கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. 

தென்னிந்தியாவில் 41 சுங்கச்  சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை கள் குறித்து 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆய்வு நடத்திய மத்திய தணிக்கை ஆணையம், அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்கட்சிகள் குர லெழுப்பின. ஆனால், அதன்மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக ஒன்றிய பாஜக அரசு சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரு வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காலாவதியான சாவடிகளை அகற்றுக!

மேலும், தமிழகத்தில் 25 சுங்கச் சாவடி களில் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப் பட உள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; எனவும், காலா வதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி லக்குழு வலியுறுத்துகிறது. 

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.