சென்னை,டிச.25- நாகை, தஞ்சாவூர், திரு வாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் அடுத்த 24 மணி நேரத் தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அதன் இயக்குனர் புவியரசன், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரண மாக அடுத்த 24 மணி நேரத் தில் தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என் றும், உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்தார். சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்ற அவர், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக நாகையில் 14 செ.மீ, காரைக்காலில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.