குரு மூர்த்தியின் சர்ச்சை பேச்சு குறித்து மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 51 வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் குரு மூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அரசியல் வாதிகளின் உதவியால் நீதிபதிகள் ஆகிவிடுகிறார்கள் என்றார். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மா தேவி காவல்நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று குருமூர்த்தியின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்கறிஞர்கள் சார்லஸ் அலெக்சாண்டர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கிருபாகரன் ஆதிகேசவலு அமர்வு இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய வலியுறுத்தினர்.