குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் தேர்வுக்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.