tamilnadu

img

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

;