tamilnadu

img

வனவிலங்குகளின் புகழிடமாக மாறிவரும் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் அச்சம்

 உதகை , நவ. 22 - உதகை அருகே அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி யில் புதர்கள் சூழ்ந்துள்ளதால் வனவிலங்குகளின் புகழிடமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை ஜெயில் ஹில் பகுதி யில் அரசு ஊழியர் மற்றும் காவலர்  குடியிருப்புகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் மாவட்ட துணை கருவூலகம், வணிகவரி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், இப்பகுதிகள் முறையாக பராமரிக் கப்படாததால் அதிகளவு புதர்கள் சூழ்ந்துள்ளது.

இத னால் இப்பகுதி வனவிலங்குகளின் புகழிடமாக  மாறி வருவதாக அங்கு குடியிருப்பவர்கள் அச்சம டைந்துள்ளனர். குறிப்பாக, காட்டு பன்றிகள் கூட்ட மாக  குடியிருப்புகளுக்குள் அடிக்கடி புகுந்து விடு வதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைவதாகவும் தெரிவித்தனர். எனவே சம் பந்தப்பட்ட துறையினர் குடியிருப்புகளை சூழ்ந் துள்ள புதர்களை வெட்டி அப்புறப்படுத்த வேண் டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.

;