tamilnadu

img

பிரபலங்களின் தனி வாழ்க்கைக்கும் உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்! இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வேண்டுகோள்

சென்னை, மே 15 - இசையமைப்பாளரும், நடிகரு மான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும்  பாடகர் சைந்தவி தம்பதி 11  ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதுகுறித்து சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

இந்த சூழலில், “ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம்  தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல” என ஜி.வி. பிரகாஷ் குமார் வேதனை தெரி வித்துள்ளார். “புரிதலும், போதுமான விவ ரங்கள் இல்லாமலும் அனுமான த்தின் பேரில் இரு மனங்கள் இணை வது, பிரிவது குறித்து பொதுவெளி யில் விவாதிக்கப்படுவது துரதிஷ்ட வசமானது.

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ‘யாரோ ஒரு தனிநபரின்’ வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அள வுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? இருவரும் பரஸ்பரம்  ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களை யும் என்னுடன் உள்ள நண்பர்கள்,  உறவினர்கள் நன்கறிவார்கள்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து, 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4  வயதில் அன்வி என்ற மகள் இருக் கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி ரிஹானாவின் மகன்தான் ஜி.வி. பிரகாஷ் குமார்.  சைந்தவி புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆவார்.