டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி, பி.எஸ்.என்.எல். இன்சூரன்ஸ் ஊழியர்கள், மருந்து விற்பனை பிரநிதிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், சி.பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன் (வங்கி), பாபு ராதாகிருஷ்ணன் (பி.எஸ்.என்.எல்), பெருமாள் (மருந்து விற்பனை பிரதிநிகள்), டி.எம்.தீபக் (டிசம்பர் 3 இயக்கம்) உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.