வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை, விழுப்புரம் வடக்கு, தெற்கு, வேலூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் எம்.சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.