tamilnadu

img

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பணி
: டெக்னீசியன்
1. எலக்ட்ரானிக்ஸ் - 17
2. எலக்ட்ரிக்கல் -17
3. இன்ஸ்ட்ருமென்டேசன் - 11
4. கம்ப்யூட்டர் -11
5. பிட்டர் - 05
6. சிவில் - 04
7. வெல்டிங் - 04
8. மெஷினிஸ்ட் - 03
9. மெக்கானிக் - 01
10. டூல் டை மேக்கர் - 01
11. டீசல் மெக்கானிக் - 01
12. டர்னர் - 01
13. சீட் மெட்டல் - 01
14. கிளாஸ் பிளவர் - 01
15. ஏ.சி - 01

சம்பளம்: மாதம் ரூ.19.900 - 63,200

தகுதி: குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 03.07.2022 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nplindia.org இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. கட்டணத்தை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110 012.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள் : 03.07.2022

மேலும் விபரங்கள் அறிய https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Advt-3-2022-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.