tamilnadu

 சென்னை முக்கிய செய்திகள்

எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் இடமாற்றம்
சென்னை,மே 16- எழும்பூர் ரயில் நிலையம்  ரூ.734.91 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது. இதற்கான மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதையொட்டி எழும்பூர் வடக்கு பகுதியில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த புறநகர் ரயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையை யொட்டி யுள்ள மணியம்மை சிலை  அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவல கத்தையொட்டி இந்த டிக் கெட் கவுண்டர்கள் வியாழன் முதல் இயங்கி வருகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு
 சென்னை,மே 16- கடந்த சில நாட்களா கவே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

புதனன்று (மே.15) நில வரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.53,800-க்கு  விற்கப்பட்டது. இந்த சூழ் நிலையில், வியாழனன்று (மே.16) காலை தங்கம் ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,360-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத் தின் விலை கிராமுக்கு ரூ.70  உயர்ந்து ரூ.6,795-க்கும், ஒரு சவரன் ரூ.54,360-க்கும்  விற்பனை செய்யப்படுகி றது. இதுமட்டும் அல்லாது,  வெள்ளியின் விலை கிரா மிற்கு ரூ.1.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.92.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.92,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;