tamilnadu

எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் வீட்டில் சோதனை

சென்னை,14-  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் பி.கே.பழனி. 

இவர் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத் தின் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பழனி, காஞ்சிபுரத்தில் பணி புரிந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை யில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்  அடிப்படையில், தற்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலை மையில், ஆய்வாளர்கள் அண்ணாதுரை, கீதா மற்றும் காவல்துறையினர், செவ்வா யன்று காலை முதல் சென்னை நொளம்பூர், முகப்பேர் மேற்கு மூன்றாவது தெரு விஜிஎன்  நகர் பகுதியில் உள்ள மருத்துவர் பழனி வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் முடிவில் பணமோ அல்லது வேறு ஏதாவது ஆவணங்களோ சிக்கினால், அதற்கான விளக்கங்களைப் பெற பழனிக்கு சம்மன் அனுப்பி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவல கத்திற்கு நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;