tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கனவு இல்லம் கணக்கெடுப்பு  பணி தொடக்கம்

விழுப்புரம், ஜூன்6- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் கனவு இல்லம் திட்டப்பணி தொடங்குவதற்கான கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர் திருவாதி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழனன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம்,ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விக்னேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

ரயில் மோதி தொழிலாளி மரணம்

கிருஷ்ணகிரி,ஜூன் 6- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  கல்குமாரம்பட்டியில் மாரிமுத்து (38) என்ற கூலி தொழிலாளி ரயில்வே பாதையை கடந்து சென்ற போது ரயில்மோதி உயிரிழந்தார்.

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை சேலம் வழியே செல்லும் விரைவு ரயில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த மார்ச் 3 அன்று  இதே பகுதியில் ஒரு பெண் தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கல் குமாரம்பட்டி உட்பட 4 கிராமத்தினர் வேலைக்கு செல்வதற்காக இதேபோல் ரயில் பாதையை கடந்து வேலைக்கு சென்று வரவேண்டிய கட்டாயம் உள்ளது.இதனால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே ரயில் பாதையை கடந்து சென்று வர இப்பகுதியில் மேம்பாலம்,அல்லது தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கல்குமாரம்பட்டி உட்பட  கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீட்டுவரி சொத்துவரி  செலுத்த  அறிவுறுத்தல்

 புதுச்சேரி, ஜூன் 6- உழவர்கரை நகராட்சி வார்டுகளில்  குடியிருப்போர் வீட்டுவரி சொத்துவரி செலுத்த  அறிவுறுத்தப்பட்டனர்.

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டுவரி,சொத்துவரி நிலுவைத்தாரர்கள் 2023-24-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்த வேண்டுமென   கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வட்டி விதிப்பு

கடந்த நிதி ஆண்டு 2023-24 காலத்திற்கான வீட்டுவரி  சொத்துவரியை 31.3.2024-ம் தேதிக்குள் செலுத்தாதவர்களுக்கு ஜூன் 17 வரை வட்டி இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்ன காலக்கெடுவிற்குள் வரி செலுத்த தவறும்பட்சத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 10 விழுக்காடு வட்டி விதிக்கப்பட்டதுபோல் கண்டிப்பாக இந்த ஆண்டும் (2024-25) 10விழுக்காடு வட்டி விதிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டுவரி,சொத்துவரி நிலுவைத்தாரர்கள் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரி செலுத்துவோர் ஜவகர் நகர் நகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள வீட்டு வரி வசூல் மையம், வி.வி.பி. நகர் வீட்டு வரி வசூல் மையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி
யில் உள்ள வீட்டு வரி வசூல் மையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை செலுத்தலாம்.

வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியிலும் மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 

;