கடலூர், செப். 27- கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சிப் பணிகள் குறிப்பிட்ட நாளுக்குள் செய்து முடிக்கப்படுகிறதா? நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக சட்டமன்ற மதிப் பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக என்.டி.வெங்கடாச்சலம் (அதி முக) உள்ளார். உறுப்பினர் களாக சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (அதி முக), சி.வி.ராஜேந்திரன் (அதிமுக), இ. கருணாநிதி (திமுக), ஆர்.காந்தி (திமுக), வி.எஸ்.காளிமுத்து (காங்.), பெ.பெரிய புள்ளான் என்ற செல்வம் (அதிமுக), எம்.கே. மோகன் (திமுக) ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தனர். பண்ருட்டியில் ரூ.3.20 கோடியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடப் பணி களை பார்வையிட்டனர். இப்பணியை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அறி வுறுத்தினர். பிறகு, மணம் தவிழ்ந்த புத்தூரில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப்பணிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதார நிலை யத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்ப டுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி கடிந்து கொண்டார். மேலும், அருகிலேயே மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி புதியதாக கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர். கடலூர்-விழுப்புரம் மாவட்டங்கள் இடையே ஓடும் மலட்டாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுறுத்தினர். பின்னர் நெய்வேலியில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பண்ணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, வடலூர் அய்யன் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி, கோதண்டராமபுரத்தில் அமைக்கப் பட்டுள்ள பண்ணைக் குட்டைகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் உடனிருந்தார்.