tamilnadu

img

செல்போன் அனுமதி மறுப்பு : ஊடகவியலாளர்கள் தர்ணா

திருவள்ளூர், ஜூன் 4- திருவள்ளூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்கள் எடுத்து செல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்   காவல் துறையினருடன்  வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவள்ளூர் மக்களவை (தனி) தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்திற்குள் செவ்வாயன்று (ஜூன் 4), முகவர்களை காவல்துறையினர் முழு சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதித்தனர். செல்போன்,  பைல், கை கடிகாரம் ஆகியவை உள்ளே எடுத்துச் செல்ல முகவர்களுக்கு அனுமதி இல்லை. முகவர்கள் வைத்திருந்த முதலமைச்சர் புகைப்படங்கள் பைல்கள் ஆகியவை வெளியே வைத்துவிட்டுச் சென்றனர். மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் கூறியதால் காவல் துறையினர் மற்றும் செய்தியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்கள் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அறையில் இணைய தளவசதி செய்து தராமல் புறக்கணிக்கப்பட்டது.வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளை வேட்பாளர்கள் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்கப்பட்டு முதலில் தபால் வாக்குகளும் அதன் பின் வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகளும் எண்ணும் பணிகள் நடைபெற்றது.

;