ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.17- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் செவ்வாயன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
மாநில உதவித் தலைவர் சோமசுந்தரம் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.தேவா, எம்.மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒன்றிய மோடி அரசின் மோசமான கொள்கையால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நூல் விலை நிலையில்லாத தன்மை, உற்பத்தி பொருட்கள் தேக்கம் காரண மாக விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதனால் 30 சதமான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. விலைவாசி உயர்வால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் இறப்பது தொடர்கதையாகி உள்ளது. எனவே ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி தொழி லாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற்று தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்துகிறது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப், பஞ்சப்படி வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தை திடீரென நிறுத்தப் பட்டுள்ளது. அதனை தொழிலாளர்களுக்கு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஒன்றிய -மாநில அரசு களுக்கு பலமுறை கடிதம் எழுதி போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஒன்றிய- மாநில அரசுகள் தொழி லாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் வலி யுறுத்துகிறது. விசைத்தறி தொழிலையும், விசைத்தறி தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் 100 மையங்களில் நடத்துவதென மாநில சம்மேளன கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில பொருளாளர் அசோகன் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் கலைஞர் நூலகம்
கடந்த ஜூன் 27 இல் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை மூலம் வழங்கி யுள்ளார். அதன்படி, திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரத்தில் 1,97,337 சதுரடி அளவில் நூலகக் கட்டடம், மின் பணிகள் ரூ.235 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையிடம் இருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது.