tamilnadu

img

பொய்யாக வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்தால் குற்ற வழக்கு!

சென்னை, மே 14- பொய்யான விவரங்களு டன் வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு  செய்து நடவடிக்கை எடுக்கு மாறு தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக, மாநிலம்  முழுவதும் உள்ள அனைத்து  வருவாய்த் துறை அதிகாரி களுக்கு 5 வாரங்களில் சுற்ற றிக்கை பிறப்பிக்குமாறும் நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்ப வர், தனது தந்தையின் மர ணத்திற்குப் பின், வாரிசுரிமை  சான்று வழங்கக் கோரி மேட்  டுப்பாளையம் வட்டாட்சியரி டம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தைக்கு இரு மகள்கள், இரு மகன்கள்  உள்ள நிலையில், தன்னை மட்டுமே வாரிசாக காட்டி  மாரண்ணன் விண்ணப்பித்தி ருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவரது மனுவை நிராகரித்து வட்டாட்சியர் உத்  தரவு பிறப்பித்துள்ளார். ஆனால்,  இந்த உத்தரவை எதிர்த்து மாரண்ணன், சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொட ர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப் போது அரசுத் தரப்பில், “பொய் தகவல்களைக் கூறி, உண்மையை மறைத்து, வாரி சுரிமை சான்று கோரி விண்  ணப்பிப்பது இந்திய தண்ட னைச் சட்டப்படி குற்றம்” என  தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பொய் தக வல்களைக் கூறி வாரிசுரிமை  சான்று பெற்று, சொத்துக் களை பெயர் மாற்றம் செய்வ தால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உண்மை தகவல்களை மறைத்து வாரி சுரிமை சான்று கோரி விண்  ணப்பிக்கப்படுவது தொடர் பான வழக்குகள் சமீப கால மாக அதிகரித்து வருகிறது. எனவே, பொய்த் தகவல்க ளைக் கூறி வாரிசுரிமை சான்று  கோரி விண்ணப்பிப்பவர் களுக்கு எதிராக குற்ற வழக்  குப் பதிவு செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வரு வாய்த்துறை அதிகாரிகளுக்  கும் ஐந்து வாரங்களில் சுற்ற றிக்கை பிறப்பிக்க வேண்  டும்’ என தமிழக வருவாய்  நிர்வாகத் துறை ஆணைய ருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இதுபோன்ற குற்ற வழக்கு தொடராமல், உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை, குற்ற  நடவடிக்கை எடுக்க வேண்  டும் எனவும் நீதிபதி தனது  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

;