வில்லியனூரில் ஏரி, குளங்களை தூர்வார கோரி சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
புதுச்சேரி, ஜூன் 17- புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் செயலற்ற ஆட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஜூன் 15 முதல் 22 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சார இயக்கத்தில் குடியிருப்புகள் அருகில் உள்ள ரெஸ்ட்ரோபார்களை மூட வேண்டும், கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. கிராமப்புற பகுதியான வில்லியனூரைச் சுற்றியுள்ள ஆறு குளங்களை தூர்வார வேண்டும், ரேசன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும் வலி யுறுத்தப்பட்டது. புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் இருந்து துவங்கிய பிரச்சாரத்திற்கு, சிபிஎம் வில்லியனூர்- நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சத்தியா மாநிலக் குழு உறுப்பினர்கள் இளவரசி, மாரி முத்துக் கமிட்டி உறுப்பினர்கள் மணிபாலன், செங்குலத்தான், இன்னரசு, சுரேந்தர், மங்கள லட்சுமி, தியாகராஜன், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். ஏம்பலம், மங்கலம், உருவையாறு, கோர்க்காடு, வில்லயனூர் ஆகிய பகுதி களில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.