tamilnadu

img

அமெரிக்கா, ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்!

கை, கால் விலங்கிட்டு இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்காவையும், அதை ஆட்சேபனை கூட செய்யாத ஒன்றிய அரசையும் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், த.வா.கட்சி தலைவர் தி.வேல்முருகன், சிபிஐ(எம்எல்)எல் மாநிலச்செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.