செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

தமிழக எம்எல்ஏ-களை மிரட்டும் கொரோனா...  பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு....  

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவார காலமாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருப்பதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கையும் 1200-யை தாண்டியுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு மற்றும் பரமக்குடி தொகுதி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆகிய அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும்,அமைச்சருமான கே.பி. அன்பழகன், ஶ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி  திமுக எம்எல்ஏ  வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக  எம்எல்ஏ அரசு ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

===படத்தில் இருப்பவர் பரமக்குடி எம்எல்ஏ ===

;