தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 7,64,989 பேர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்றானது சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி கொரோனா தொற்றுகள் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழனன்று, 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,64,989 ஆகா அதிகரித்துள்ளது. இன்று 2,251 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,39,532 பேர் குணமடைந்துள்ளனர். 13, 907 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,550 பேர் உயிரிழந்துள்ளனர்.