tamilnadu

கொரோனா: 6 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டியது

சென்னை, மே 28 - சென்னையில் கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ஒட்டு மொத்த பாதிப்பில் 65.64 விழுக்காடாகும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் முக்கியமான 6  மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1000-ஐ  கடந்துள்ளது. அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 ஆயி ரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத னைத் தொடர்ந்து கோடம்பாக்கம் 1,559, திரு.வி.க நகர் 1,325,  தேனாம்பேட்டை 1,317, தண்டையார் பேட்டை  1,262, அண்ணாநகர் 1,046 என்ற அளவில் பாதிப்பு உள்ளது.