tamilnadu

img

ஜிஎம்டி நிறுவனத்தில் தொடரும் வேலை நிறுத்தம்

சென்னை, ஜூன் 28 - சென்னை பள்ளிக் கரணையில் செயல்படும் கிண்டி மெஷின் டூல்ஸ் (ஜிஎம்டி) நிறுவனம் செயல் படுகிறது. லேத் எந்திரங் களுக்கான உதிரி பாகங் களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தில் 260  தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர்.

புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி  மார்ச் 22ந் தேதி முதல் தொழிலாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக 126 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த போராட்டத்தின் 99வது நாளான ஜூன் 28  அன்று நிறுவனத்தின் வாயி லில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த  கூட்டத்திற்கு மூத்த தலைவர் எஸ்.அப்பனு தலைமை தாங்கினார்.

சட்டவிரோத பணி நீக்கத்தை ரத்து செய்ய  வேண்டும், தொழிலாளர் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், இன்ஜினியரிங் எலக்ட் ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் மா.விஜயகுமார் உள்ளிட்ட தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர்.