சென்னை:
உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தன்னை தாக்க முயன்றதாக காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.அம்பேத்கரின் 64ஆம் நினைவு நாளின் போது (டிச.6) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரின் சிலைக்கு திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக் குமார் மரியாதை செய்ய சென்றார்.அப்போது பாரிஸ் கார்னரில் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆணையர் கொடி லிங்கம் ஆகியோர் எம்.பி. ஜெயக்குமாரை மறித்து கைதுசெய்ய முயன்றனர். மேலும் அவரின் காரில் முன்பு இருந்த காங்கிரஸ் கொடியை சேதப் படுத்தி, அவரைத் தாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.இந்நிலையில், (டிச.17) தன்னை தாக்க முயன்ற உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.பி. ஜெயக்குமார் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.