வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

கும்மிடிப்பூண்டியில் காங். வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

திருவள்ளூர்,ஏப்.5-


திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாரை ஆதரித்து கூட்டணி காட்சிகள் சார்பில் வெள்ளியன்று (ஏப்.5) கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆரம்பாக்கத்தில் துவங்கி மீனவ பகுதியான பாட்டைகுப்பம், நொச்சிகுப்பம், கண்ணம்பாக்கம், மாநல்லூர், பாதிரிவேடு, மாதர்பாக்கம், தேர்வாய், பூவலம்பேடு, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்டு ஏராளமான கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், மு.மணிபாலன், வெங்கடாசலபதி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.சி.சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சூர்யபிரகாஷ், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வி.சி.கநிர்வாகி நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;