tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஜூன் 2- நார்வே செஸ் போட்டியில் உலகின்  நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு  எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்தி யாவின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கிளா சிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம்  நிலை வீரரான ஃபேபியா கருவானாவை  தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம்  பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15 ஆம் தேதிகளில் திட்டமி டப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞா னந்தாவுக்கு திமுக தலைவரும் முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில்,“ நார்வே செஸ்  தொடரில் அற்புதமாக விளையாடியுள் ளார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், பாபி யோனாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார். செஸ் உல கமே இவரின் திறமையை பார்த்து வியக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டை சூழ்ந்துள்ள இருள் ஜூன் 4 இல் அகலும் 
திருமாவளவன் பேட்டி

சென்னை, ஜூன் 2- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர்  கூறுகையில், “தமிழ்நாட்டில் 100 விழுக்  காடு பாஜக வெற்றி பெறப் போவ தில்லை. மக்களவைத் தேர்தல் முடிவு களுக்குப் பிறகு ‘இந்தியா’கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஒரு போதும் பொருட்படுத்தவில்லை. ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது. இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும் என்று தெரிவித்தார்.

பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, ஜூன் 2- மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு களை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கை வருமாறு: 

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து  மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உத வித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகை கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உத வித்தொகைகள் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படு வதை உறுதி செய்யும் நோக்கில் மாண வர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்  படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து  பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேற்பார்வையில் வங்கிக் கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

124 ஆண்டுகளுக்குப் பிறகு கோடையில்  அதிக மழைப்பொழிவு!

சென்னை, ஜூன் 2-  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை  காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வெளுத்து வாங்கியது. மேலும்  வெப்ப அலையும் வீசத் தொடங்கியது. இதனையடுத்து மே மாதம் முழுவதும் வெப்ப அலை தொடரும் எனவும் இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் மே முழுவதும் வெயில் கொளுத்தும் என மக்கள் அச்சம் கொண்ட நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி,  ரெமல் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக கோடை மழை  பெய்தது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் 200 மி.மீ வரை மழை பதிவானது. இதன்  மூலம் தமிழ்நாட்டில் கடந்த 124 ஆண்டு களில் 7ஆவது முறையாக நிகழாண்டு மே மாதத்தில் அதிக மழை பதிவாகி யுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக  1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் 205.2  மி.மீ. மழை பதிவானது. கடந்த 2014-இல்  139.3 மி.மீ. நடப்பு ஆண்டு மே மாதத்தில் 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நிக ழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 19 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது.
 

;