செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

பட்டயப் படிப்பு ஆசிரியர் பயிற்சி தேர்வாளர்கள் போராட்டம்...

சென்னை:
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு சென்ற 21ஆம் தேதி முதல் தொடங்கி, அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு அரசு தேர்வுத் துறையின் வழிகாட்டுதலின்படி நேரடியாகத் தேர்வு நடத்தப்படுகிறது.சென்னை லேடி வெல்லிங்டன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாணவிகள் தேர்வினை புறக்கணித்து வியாழனன்று (செப்.24) காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மாணவிகள், பி.எட்., ஆசிரியர் கல்வியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவதுபோல் தங்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவிகள் 10.30 மணிக்குத் தேர்வு எழுத சென்றனர்.

;