சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தரங்கம் வெள்ளியன்று (ஆக.23) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்வில் ‘சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்’ நூலை, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி வெளியிட, சங்கம்பீடியா களஞ்சியத்தை உருவாக்கிய கணிதப் பேரா. பாண்டியராஜா பெற்றுக் கொண்டார். சிந்துவெளி ஆய்வு மைய மதிப்புறு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பேபிகுல்நாஸ், கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி முதல்வர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.