கொரோனா பெருந்தொற்றால் ஆன்லைன் வகுப்புகள் நடந்த நிலையில் தற்போது நேரடியாக தேர்வுகள் நடத்த கூடாது என மாணவர்கள் மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது, மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், அந்த 12 வழக்குகளிலும் தமிழ்நாடு காவல் துறையினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.