சென்னை;
திமுகவின் பிரச்சார பயணம் தடையை கடந்து தொடரும் என உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்களன்று (நவ.23) திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை கூட்டம், அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆ.ராசா, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 30 செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பரப் புரை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத் தில் ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
மேலும், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீதான, காவல்துறையின் தொடர் கைது நடவடிக்கையை கண் டித்து இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, “கொரோனா ஆய்வு என்ற போர்வையில் அரசு செலவில் மாவட்டந்தோறும் அரசு விழாவை அரசியல் கூட்டமாகநடத்தி வரும் முதலமைச்சர், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கொஞ்சமும் பின்பற்றப்படாமல் பெருந்திர ளான கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதுடன் தரக் குறைவாகவும் பேசி வருகிறார். அவரைப் போலவே, அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களில் இதனை பின்பற்றுகின்றனர்.
கண்டனம்
இவர்கள் யாரையும் காவல் துறை கைது செய்வதும் இல்லை, இரவு வரை சிறைப்படுத்துவதும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது வரவேற்பு என்ற பெயரில், சாலை நெடுகிலும் கூடி நின்ற அதிமுகவினரை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, சென்னை காவல் ஆணையரே சாலையில் இறங்கிப் பாதுகாப்பு அளித்த, எல்லை மீறிய செயல்பாடுகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.மக்களாட்சியில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல்
பரப்புரை செய்யும் உரிமை உண்டு. ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்ற ஆணவத்தில் காவல்துறையை பயன்படுத்தி அதிகார வரம்பை மீற முயற்சித் தால், அதற்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், அவர்களை தூண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என திமுகவின் உயர் நிலை செயல்திட்டக்குழுக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.