tamilnadu

img

முருக்கோடை- ராயர்கோட்டை இடையே மூலவைகை ஆற்றில் இடியும் அபாய நிலையில் பாலம்

கடமலைக்குண்டு, ஜூலை.7- தேனி மாவட்டம்  வருசநாடு அருகே  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முருக் கோடை- ராயர்கோட்டை இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது.  இந்தப் பாலத்தின் வழியாக  அதிக  அளவில் விவசாயிகள் தங்களது விளையும் பொருட்களை எடுத்துச்  செல்கின்றனர்.

இந்த பாலம் கட்டப் பட்ட பின்னர் பாலத்தின் கீழ்ப்பகுதி யில்  எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.  அதன் காரணமாக பாலம் சேதமடைய தொட ங்கியது.  குறிப்பாக பாலத்தின் தூண் களில் லேசான விரிசல்கள் ஏற்படத் தொடங்கியது. இது தொடர்பாக அந்த  பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் தும் பாலத்தை சீரமைக்க எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட முறை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது.

அதன் காரணமாக  அதிக அள வில் பாலத்தின் தூண்களின் கீழ்ப்பகுதி யில் மண்ணரிப்பு ஏற்பட்டு அதன் வழி யாக ஆற்று நீர் உள்ளே சென்று வெளி யேறி வருகிறது. இந்த நிலை தொட ர்ந்தால் விரைவில் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.  சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாலத்தின் கீழ் பகுதியை  சீரமைத்து மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;