மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு புற்று நோய் மற்றும் முடநீக்கியல்துறைகளில் சிறந்த சிகிச்சை அளித்ததற்காக சென்னையில் நடைபெற்ற 12வது டேன் கேர் மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பும் தமிழக அரசும் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் இதற்கான விருதை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அந்த மருத்துவமனையின் நிர்வாகியிடம் வழங்கினார்.