குறைகேட்பு நாள் கூட்டம் ஒத்திவைப்பு
விழுப்புரம், டிச.7- வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் நடை பெற்று வரும் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம், விழுப்பு ரம் மாவட்டத்தில் டிச.9 அன்று நடைபெறுவதாக இருந்த கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறி வித்திருக்கிறார்.
அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க கோரிக்கை
சிதம்பரம், டிச.7- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு உறுப்பினர் அருட்செல்வியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்கலைக் கழக பொருளாளர் வீரமணி, இணை பொதுச் செயலாளர்கள் காந்தி, கார்த்தி, சுரேஷ்பாபு, துணைத் தலைவர் ராஜா சங்க ஊழியர்கள் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், என்எம்ஆர் ஊழியர்களுக்கு அரசு அறி வித்துள்ளபடி அந்தந்த பணி பெயரில் உள்ள ஊழியர்களுக்கு 2024 - 2025 வருடத்திற்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும். அதேபோல் தொகுப்பு ஊழியர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அருட்செல்வி இதுகுறித்து அரசுக்கு தெரியபடுத்தி நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
புயல் மழையால் பாதிப்பு
ரூ.10 ஆயிரம் நிவாரணம் விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
கள்ளக்குறிச்சி,டிச.7- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தியாக துருவத்தில் மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் குடும்பத்திற்கு 200 நாள் வேலையும் கூலி ரூ. 600 வழங்க வேண்டும்.
வீடில்லாத தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 60 வயது முடிவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த பேரவைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பொருளாளர் பி.பழனி, கே.உத்திர குமார், எம்.ராஜீவ்காந்தி, ஏ.கே.முருகன், கே.ஆனந்தராஜ், வேல்முருகன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் ; இந்தியா தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 வாரத்திற்கு முன்பு பெர்த்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார் க்கின் (6 விக்கெட்டுகள்) மிரட்டலான பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து தனது முதல்இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்டெஸ்ட் போட்டியை போல் அல்லாமல் நிதானமாகரன் குவித்தது. எனினும் நடுக் கட்டத்தில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டின் (140 ரன்கள்) அதிரடி சதத்தின் உதவியால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 87.3 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 157 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வழக்கம் போல ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் - கம்மின்ஸ் - போலந்து கூட்டணியிடம் சிக்கிக் கொண்டது. 105 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி மிடில் ஆர்டரை இழந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணியை விட 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டடம் நடைபெற உள்ளது.