tamilnadu

மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் உடல்பரிசோதனை

மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ஒருமுறை  கட்டாயம் உடல்பரிசோதனை 

60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய  வேண்டும் என்று டாக்டர் நடராஜன் அறிவு றுத்தினார். விஎச்எஸ் பன்னோக்கு சிறப்பு  மருத்துவமனை சார்பில், மூத்த குடிமக்க ளுக்கான ‘ஆரோக்கியம் 100’ நிகழ்வு தொடக்க விழா தரமணியில் நடைபெற்றது. இதை முதியோர் நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: மூத்த குடிமக்கள் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய உதவி யாக இருக்கும். இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். மேலும், மூத்த குடி மக்களை எப்படி கவனிக்கிறார்கள், நிதி நில வரம் என எல்லா விஷயங்களையும் அறிந்து  கொள்ள முடியும். மூத்த குடிமக்களுக்கு நோய் வந்தபிறகு, எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு நோய் வராமல் காப்பதே மிக முக்கியம். 60  முதல் 70 வயதுக்குள் ஆண்டுக்கு ஒரு முறை  உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் தங்களுக்கு உடல் பிரச்னை இல்லை என்று நினைத்து கொண்டு இருப்பார்கள். ஆனால், இதயப்  பிரச்சனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல நோய்கள் அமைதி யாக அறிகுறியின்றி இருக்கும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டால், பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கமுடியும்.இதற்கடுத்து, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, நிமோ னியா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். மேலும், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி, தேவைப்படுவோருக்கு போட்டு கொள்ள லாம். நிம்மோனியா தடுப்பூசி ஒரு முறையும், இன்ஃப்ளூயன்ஸா ஆண்டுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும். இதன் மூலமாக, ரத்து அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுப்ப டுத்தப்படும்.அண்மைகாலமாக, மூத்த குடிமக்களுக்கு வைட்டமின்-டி பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடும் வலி யால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வருபவ ர்களை பரிசோதிக்கும்போது, வைட்டமின்- டி பற்றாக்குறை இருப்பது தெரிகிறது. இதற்கு உடலில் சூரிய ஒளி படாமல் இருப்பதே காரணமாகும். எனவே, நமது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். தினசரி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, புரதச் சத்து மிக்க உணவு எடுத்து கொள்ள வேண்டும். இதனால், உடல் நலத்தை பாது காக்க முடியும் என்றார் நடராஜன். நிகழ்ச்சியில், விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலர் சுரேஷ் சேஷாத்ரி கூறுகை யில், “ஆரோக்கியம் 100 மூலமாக, மூத்த குடி மக்களுக்கு 100 நாட்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, ஆரோ க்கியம் அட்டை கொடுக்கப்படும். இந்த அட்டையில் பதிவு செய்தபிறகு, மருத்துவ சிகிச்சைக்கு 10 சதவீதம் சலுகை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்காக, இலவச பதிவு, 5 கி.மீ. சுற்றளவுக்குள் இலவச ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவ ரங்களுக்கு 9150017981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.