tamilnadu

img

மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

சென்னை, ஆக. 21- சென்னை காசிமேட்டில் மீன் ஏலக்கூடம் அருகே பைபர் படகுகள் கட்டி நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் வீல் ஹவுஸ் என கூறப்படும் படகு வீடு அமைந்துள்ளது. இந்த இடத்தை விசைப்படகு களுக்கு வெல்டிங் வேலை கள் பார்த்து வரும் தாஸ் என்பவர் பயன்படுத்தி வந்த தாக கூறப்படுகிறது. அவரது வெல்டிங் தொடர்பான பொருட்களை இங்கு வைத்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் புதன் கிழமை அதிகாலை திடீ ரென அந்த வீல் ஹவுஸ் தீ  பற்றி எரிந்துள்ளது. தீ அரு காமையில் இருந்த சைக்கிள் ரிக்சாவிற்கும் பரவியது.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் துரித மாக செயல்பட்டு அரு காமையில் இருந்த வலை களையும், படகுகளையும் அப்புறப்படுத்தினர். இத னால் பெரும் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை தீய ணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.