tamilnadu

img

போதையில் சானிடைசர் குடித்த 7 பேர் பலி

ரஷ்யாவில் போதையில் சானிடைரை குடித்த 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ரஷ்யாவில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் விருந்து ஒன்று நடைபெற்றது. அப்போது மது பற்றாக்குறையை சரி செய்ய சானிடைசரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சானிடைசரை  குடித்த 7 பேர் உயிரிழந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.