tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா... 

சென்னை
கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தினமும் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக உயர்வதால் அரசு தடுமாறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,629 ஆக உயர்ந்துள்ளது. மாலை 6 மணி வரை யாரும் இறக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உள்ளது.இன்று ஒரே நாளில் 27 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.