tamilnadu

4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர எச்சரிக்கை

சென்னை, மே 15 - தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மே 19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் மே 16 அன்று மாநிலத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்று டன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ  மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், மே 17 அன்று மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி, திருப்பத் தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒரு  சில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதையொட்டி பேரிடர் மேலாண்மை ஆணையர் 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர எச்சரிக்கை பிறப் பித்துள்ளார்.

;