சிதம்பரம்,ஜன.13- காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி. புத்தூர் கிராமம் வடவாறு ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது. 15 அடி ஆழம் கொண்ட ஆற்றில் பெரியவர்கள் தவிற பெண்கள் மற்றும் சிறு வர்கள் படிகளில் அமர்ந்து குளிப்பது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் அப்பகு தியை சேர்ந்த சினேகா (10), தீபிகா (7), விஜயலட்சுமி (8) ஆகிய மூவரும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென தீபிகா, சினேகா இருவரும் படிக் கட்டில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த விஜயலட்சுமி இரு வரின் தலை முடிகளை பற்றிக்கொண்டு கூச்ச லிட்டுள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 50 அடிகள் தூரத் தில் கரையோரம் இருந்த முட்புதரை பற்றிக்கொண்ட விஜயலட்சுமி மற்ற இரு வரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஆற்றில் இறங்கி விஜய லெட்சுமியை மீட்டனர். இதற்கிடையில் மற்ற இரண்டு சிறுமிகளும் ஆற்றில் மூழ்கிவிட்டனர். தொடர்ந்து தேடலில் ஈடுபட்ட கிராமத்தினர் உயிரிழந்த நிலையில் சினேகாவின் உடலை மீட்டனர். நீண்ட நேரம் தேடியும் தீபிகா உடல் கிடைக்காததால் இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தக வல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீ அணைப்பு வீரர்கள் சிறுமியின் உடலை திங்கட் கிழமை காலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வடவாற்றில் படிக் கட்டுகள் உடைந்து சேத மடைந்துள்ளன. இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கிராமவாசிகள் தங்களின் பிள்ளைகளை தனியாக ஆற்றுக்கு அனுப்புவ தில்லை. பொங்கல் வேலை களில் கிராம மக்கள் ஈடுபட்டி ருந்ததால் சிறுமிகள் ஆற் றிக்கு சென்றதை யாரும் கவனிக்கவில்லை என்றனர். இரண்டு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.