முன்னாள் முதல்வரும் திமுக மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்தநாளையொட்டி தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.