வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம்:  டிரம்ப் அடாவடி பேச்சு 

புளோரிடா
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுலைமானி கொலை குறித்து புதிய காரணத்தைக் கூறியுள்ளார்.  

புளோரிடாவில் பாம் கடற்கரையில்  நடைபெற்ற கூட்டத்தில் அவர் சுலைமானி கொலை குறித்துக் கூறியதாவது,"ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவைப் பற்றி தவறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  அவர் கூறுவதையெல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது. இதனால் தான் அவரைக் கொன்றோம். சுலைமானியைக் கொன்ற அமெரிக்கப் படையுடன் கடைசி நிமிடம் வரை நான் தொடர்பிலிருந்தேன்" என டிரம்ப் தனது பேட்டியில் மோதலை தூண்டும் வகையில் பேசியுள்ளார். டிரம்ப் பேச்சிற்கு ஈரான் சார்பில் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

;