விருதுநகர்:
பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தலைநகர் தில்லியில் விவசாயிகள் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்துசெய்யக் கோரியும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் காளிதாஸ் தலைமைவகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்தையா, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், மாவட்டப் பொருளாளர் மனோஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், வீ.மாரியப்பன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.ராமசாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வானை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு ஊழியர்கள்
இராஜபாளையத்தில் கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு ஊழியர் சஙக மாவட்டச் செயலாளர் ஆர். முனியான்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டத்துணைத் தலைவர ஜி. கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் மாரியப்பன் சங்க செயலாளர் கணேசன், பொருளாளர் ஜி.எஸ்.சங்கரி, சுமைப்பணி சங்க தலைவர் விஜேயந்திரன், ஈஸ் வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.