வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

கல்விச்சீர் வழங்கும் விழா

சீர்காழி, ஏப்.5-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் விழா.விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாகக் கிராம மக்கள்பள்ளிக்குத் தேவையான அனைத்துக் கல்வி உபகரணப் பொருட்களையும் சீராக அங்குள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் உமா வரவேற்றார். ஊர்த் தலைவர் வீராசாமி, ராமதேவன், முருகன், சந்தன்ராஜ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர்கள் தங்கசேகர், கோவிந்தராஜ், ரேணுகா, முன்னாள்ஊராட்சி தலைவர் கலைமாறன் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் இந்திராகாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கணேஷ் நன்றிகூறினார்.

;