tamilnadu

img

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி சிஐடியு சார்பில் சாலை மறியல் 

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கோவையில் சிஐடியு கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பெண்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும். நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிதாக்க வேண்டும். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பணியிடத்தில் பெண்களுக்கான கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். தொழிலாளிக்கு மாத ஓய்வூதியம் 3ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிஐடியூ கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் உரையாற்றினார். இதில் சிஐடியு கட்டுமான சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

;