tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

போதை மருந்து விற்ற பைனான்ஸ் அதிபர் கைது

கோவை, ஜூன் 18- கோவையில் போதை மருந்து விற்ற பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் போலீசார்  ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந் தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்த னர். அப்போது அவர் கஞ்சா மற்றும் போதை மருந்து வைத்தி ருந்ததும், அவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டி பகுதி யைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) என்பதும் தெரிய வந்தது. சதீஷ் குமார் அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும்  கஞ்சா மற்றும் போதை மருந்து விற்பனையிலும் ஈடுபட்டு  வந்து உள்ளார். கோவையில் உறவினர்கள் உள்ளனர் என்ப தால் அடிக்கடி இங்கு வந்து சென்று உள்ளார். அதன் பிறகு  கோவை புதூரில் தனியாக அறை எடுத்து தங்கி கஞ்சா  மற்றும் போதைப் பொருட்களை தேவைப்படும் நபர்களுக்கு  விற்று வந்துள்ளார். இதில் அதிக பணம் கிடைத்துள்ளது.  மெத்தபெட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதைப்  பொருள் ஒரு கிராம் ஒரு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விற் பனை செய்யப்படுகிறது என்பதால் அதிலும், ஈடுபட்டுள் ளார். இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த  கோவை புதூர் அறைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 525 கிராம் கஞ்சா மெத்தபெட்டமையின் போதைப் பொருள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். போதைப் பொருள் விட்ட பணத்தில் தங்க நகைகளை வாங்கியதாக, போலீசாரிடம் சதீஷ்குமார் கூறியதாக கூறப் படுகிறது. தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க பிரேஸ் லெட், மோதிரங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் விலை உயர்ந்த காரையும் போலீசார் கைப் பற்றினர். பைனான்ஸ் அதிபர் என்று கூறிக் கொண்டு போதை பொருளையும் விற்று வந்த சதீஷ்குமார் தங்க நகைகளை அணிந்து கொண்டு விலை உயர்ந்த காரில் சதீஷ்குமார் சுற்றி உள்ளார். கடைசியில் கோவை போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார்  நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வெறிநாய் கடித்து 11 பேர் படுகாயம்

சேலம், ஜூன் 18- சேலம் மாவட்டம், தம்மம் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாயன்று அவ்வழியாக சென்ற காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் (60) மற்றும் ஆராதனா (5),  வருணவர்ஷினி (4), தன் விகா (2) உட்பட 11 பேரை  வெறிநாய்கள்  கடித்தன.  இதில் தன்விகா (2), விபி ஷாஸ்ரீ (5) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.

வனப்பகுதியில் கேபிள் பதிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம்

உதகை, ஜூன் 18– உதகையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் தடையால் குடிநீர் விநியோ கம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, பார் சன்ஸ்வேலி அணைப் பகுதியில் வனத் துறையின் அனுமதி பெற்று நிலத்தடி மின் கேபிள் பதிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், பார்சன்ஸ்வேலி அணைக்கு மின் விநியோகம் செய்யும் மின்கம்பிகள் அடர்ந்த வனப்பகுதி வழி யாகச் செல்வதால், பலத்த காற்று வீசும் நேரங்களில் மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்து மின் தடையை ஏற்படுத்துகின் றன. கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களாகவும், தற்போது கடந்த 5 நாட்களாகவும் பெய்த கன மழையால் ஏற்பட்ட மின் தடையால், மோட்டார் பழுதடைந்து கடந்த 20 நாட்களாக உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நகராட்சி ஆணை யர் வினோத், தலைவர் எம். வாணீஸ் வரி, துணைத் தலைவர் ஜே.ரவிகுமார், பொறியாளர் சேகரன் மற்றும் கவுன்சி லர்கள் அடங்கிய குழுவினர் புதனன்று பார்சன்ஸ்வேலி அணையை ஆய்வு  செய்தனர். கடந்த ஒரு மாத காலமாக பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்துக் குச் செல்லும் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்து மின் தடை ஏற்படுவதால் தண் ணீர் பம்ப் செய்ய முடியாமல், தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகி றது. உதகை மக்களின் குடிநீர்ப் பிரச்ச னையைத் தீர்க்க நிலத்தடி மின் இணைப்பு  திட்டத்தைக் கொண்டுவர நகராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்கிற  கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில், இத்திட்டத்துக்கு வனத் துறை அனுமதி கிடைத்தவுடன் விரை வில் செயல்படுத்தப்படும் என நகராட் சித் தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணைத்தலைவர் ஜே. ரவிகுமார் தெரி வித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகை யில், “சாண்டிநல்லா மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் இணைப்பு அதிக தொலைவில் இருப்பதால் பூமிக்கடி யில் கேபிள்கள் கொண்டு செல்வது  சிரமம். எனவே, பார்சன்ஸ்வேலி அணைக்கு மிக அருகில் உள்ள காட் டுக்குப்பை துணை மின் நிலையத்திலி ருந்து நிலத்தடியில் நீரேற்று மையத் துக்கு மின் கேபிள்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்தில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு கேபிள் பதிக்க வனத் துறையின் அனுமதி தேவை. இந்த அனு மதி சுமார் 20 நாட்களில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத் தவுடன் நிலத்தடி மின்சார இணைப்பு நீரேற்று மையத்துக்கு வழங்கப்படும். அதன் பிறகு மின்சாரப் பிரச்சனை இருக்காது” என்றனர்.

தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பட்டை

சேலம், ஜூன் 18- மகுடஞ்சாவடி அருகே தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடந்த தால் ஏற்காடு விரைவு ரயில் செவ்வான்று நள்ளிரவு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வா யன்று இரவு புறப்பட்டது. இந்த ரயில் சேலம் அருகே மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பா ளையம் அருகே வந்தபோது, ஏதோ ஒரு பொருளை ரயில் இன்ஜின் தள்ளிச் செல்வது போல சப்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலை நிறுத்தி பாா்த்தபோது, தண்டவாளத் தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை  கிடப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையர் செளரவ்குமார் மற்றும் சேலம், ஈரோடு ரயில்வே போலீசார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும் மோப்பநாய் வர வழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பட்டையை தனிநபரால் எடுத்துவர முடியாது என்பதால் இரண்டு மூன்று போ் சோ்ந்து எடுத்து வந்து தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பட்டையை தள்ளிக்கொண்டு வந்ததால் ரயிலின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதையடுத்து மகுடஞ்சாவடியிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, ஏற்காடு விரைவு ரயில் 2  மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி புறப் பட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

மின்தடை சேலம்,

ஜூன் 18- சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே உள்ள சன்னி யாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) பராமரிப்புப் பணி கள் நடைபெறவுள்ளது. இத னால் படைவீடு, பச்சாம் பாளையம், சன்னியாசிப் பட்டி, ஊஞ்சக்கொரை, மேக் காடு, மொத்தையனூர், சின் னாகவுண்டனூர், ஜெ.ஜெ. நகர், பிரிவு சாலை, கடல் பாலியூர், கவுண்டனூர், விநா யகா மெகாசிட்டி, கொல்லப் பட்டி, செட்டியார் கடை, வாணிவித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், செளதா புரம், நத்தமேடு ஆகிய பகுதி களில் வியாழனன்று காலை  9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தக வலை சங்ககிரி மின் வாரிய செயற்பொறியா ளர் எஸ்.சங்கரசுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.

முனையமாக மாறும் போத்தனூர் ரயில் நிலையம்

ஆர்.என்.சிங் பேட்டி கோவை, ஜூன் 18- போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாம் முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் 3  ஆண்டுகளில் நிறைவடைந்து, புதிய ரயில் சேவைகள் துவங்கும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.  இந்தியா முழுவதும் உள்ள பழைய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் வகையில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம், போத்தனூர் ரயில் நிலை யத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கிகள், நடை பாதைகள், வாகன நிறுத்துமிடம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலா ளர் ஆர்.என்.சிங், செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘கோவையின் இரண்டாவது ரயில் முனையமாக போத்தனூர் ரயில் நிலை யம் தரம் உயர்த்தப்படுகிறது. அதற்காக  ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. மேலும் 3 ஆண்டுகளில் இந்த பணி கள் நிறைவடையும். இரண்டாவது ரயில் முனையமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், போத்தனூரில் இருந்து புதிய ரயில் சேவை கள் துவங்கப்படும்’’ என்றார். முன்னதாக ஆர்.என்.சிங்கை சந்தித்த போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு  ஒன்றை அளித்தனர். அதில்  ‘’கோவை - மங்க ளூரு இண்டர்சிட்டி ரயில் மற்றும் எர்ணா குளம் - காரைக்கால் ரயில் ஆகியவற்றை போத்தனூர் ரயில் நிலையத்தில்  நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். போத்தனூர் ரயில்வே பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையம் - கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை பொள் ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.