பெற்றோரை வெளியேற்றினால் சட்ட நடவடிக்கை
உதகை, ஜூன் 18 – சொத்துகளைப் பெற்றுக்கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற் றும் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தரப்படும் என நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான பாலமுருகன் எச்சரித் துள்ளார். உலக முதியோர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன் னிட்டு, புதனன்று உதகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி முரளிதரன் தலைமை ஏற்றார். இந்த முகாமில், தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதி பதி சந்திரசேகரன் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி முரளிதரன் சட்ட உதவி மையத்தையும் திறந்து வைத்தார். இம்முகாமில் பங்கேற்று சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் செயலாளர் பாலமுருகன் பேசுகையில், வழக்கறி ஞரை வைத்து வழக்கு நடத்த முடியாத வர்களுக்கு இலவசமாக வழக்கறிஞர் களை நியமித்து வழக்கு நடத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவுகிறது. இலவச சட்ட சேவை களைப் பெற பெண்கள், குழந்தை கள், கொத்தடிமைத் தொழிலாளர்கள், சிறைக் காவலில் இருப்போர், பாது காப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்ற வாளிகள், மனநல மருத்துவமனை, மன நோய் மருத்துவமனை மற்றும் இல்லங் களில் காவலில் உள்ளவர்கள், தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவி னர், அத்துடன் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் ஆகியோர் எந்தவித நிபந்தனையும் இன்றி இந்த உதவியைப் பெறலாம். சட்டத்தின் துணை கொண்டு பிரச்சினை களுக்கு தீர்வு காண வேண்டும். சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கு உதகை யில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகலாம் என்றார். மேலும், மூத்த குடிமக்களின் தேவை யற்ற அலைச்சலைத் தவிர்க்கும் வித மாக, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்திலேயே சட்ட உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஆர்டிஓ அலுவலகங்களிலும் இத் தகைய மையங்கள் செயல்படுகிறது. பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பரா மரிக்காமல் கைவிடுவது, சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றி முதியோர் இல்லங்களில் சேர்ப்பது போன்ற புகார் களை இந்த மையங்களில் அளிக்க லாம். புகார்கள் குறித்து சட்டரீதியாக விசாரணை நடத்தி, பிள்ளைகளிடமி ருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரப்படும் என்றார்.