வேளாண் விரோத சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் பேரெழுச்சிக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. புதனன்று கோயம்புத்தூர் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை - பல்லடம் சாலையில் இடதுசாரிகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமையேற்றார். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.