tamilnadu

img

30 ரூபாய் கட்டணம் 3000 ஆக உயர்வு.... ஊட்டி மலை ரயில் இனி கனவுதான்...

ஊட்டி:
ஊட்டியின் இயற்கை அழகை சுற்றிப் பார்ப்பதற்கு பல்லாண்டு காலமாக ரயில்வே நிர்வாகம் மலைப் பாதையில் ரயில் இயக்கி வந்தது. இந்த ரயிலில் பயணம் செய்வது அலாதி பிரியம்.ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சுற்றுலா செல்லும் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டியை சுற்றிப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் மலை ரயிலில் பயணிப்பதை விரும்புவர்.மத்திய பாஜக மோடி அரசின் தனியார்மய கொள்கையால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே.இப்போது அந்த ரயிலின் பெயர் டிஎன்.43. ஒரு  முறை சென்று வரும் ரயில்வேக்கு வாடகை தொகை ரூ.5 லட்சம். ஜனவரி 3 ஆம் தேதி வரை வாடகைத் தொகையை தனியார்  நிறுவனம் ரயில்வேக்கு கட்டிவிட்டது.இந்த ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண் நியமித்து இருக்கிறார்கள்.

இரண்டு ஸ்நாக்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் இலவசம் என்று அறிவித்து உள்ளது.அரசு ரயில்வேயின் பழைய  கட்டணம் ரூ.30.தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000.இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை டிமான்டை பொறுத்து, ரூ. 8000 முதல் ரூ.12000 வரை இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை ரயில் பாதையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்தின் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் திறந்திருக்கிறார்கள்.ஊட்டி ரயிலில் ஒரு குடும்பம் மே மாதம் டூர் போய் வர ரூ.1 லட்சம் செலவாகும்.30 ரூபாயில் பயணித்து வந்த சுற்றுலா பயணிகள் 3000 ரூபாய் கட்டணத்தால் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

;