திருப்பூர், அக். 23 – மத்திய பாரதிய ஜனதா அர சின் தொழிலாளர் விரோதப் போக் கைக் கண்டித்து 2020 ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை திருப் பூரில் வெற்றிகரமாக நடத்துவ தென தொழிற்சங்கங்களின் தயா ரிப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் புதன்கிழமையன்று ஏஐடியுசி பனியன் சங்க அலுவல கத்தில் ஏஐடியுசி பொதுச் செயலா ளர் ஏ.ஜெகனாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மோடி தலைமையிலான பாஜக அரசு தனது இரண்டாவது ஆட்சி யில் 100 நாட்களை நிறைவு செய் திருக்கிறது. நாடும், மக்களும் ஒரு கடுமையான சூழலை எதிர் கொண்டு வருகின்றனர். பொரு ளாதார மந்தநிலை தொடர்கிறது. வேலை இழப்புகள் தொடர்கின் றன. வேலையின்மை உச்சத்தில் உள்ளது. வறுமைநிலை ஆழ்ந்தும், அகன்றும் செல்கிறது. சராசரி வருமானம் மிக வேகமாக குறைகி றது. தேசிய உற்பத்தி செல்வங்கள் தனியாருக்கும், அந்நிய நாட்டா ருக்கும் தரப்படுகின்றன. உள் நாட்டு உற்பத்தித் திறன் அழிக்கப் பட்டு, சொந்த நாட்டு தொழிலே இல்லாத நிலை உருவாக்கப்படு கிறது. சமூகத்தில் பொருளாதார சமத்துவமின்மை மிகமோசமான எல்லைக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. இந்நிலையில் சப்கா சாத், சப்கா விகாஸ் (எல்லோரின் முயற்சி, எல்லோருக்கும் வளர்ச்சி) என்பது ஒரு நகைக்கத்தக்க முழக் கமே ஆகும். பொருளாதாரத்தை சீரழித்த அதே கொள்கைகள், இன்று மிகுந்த அகந்தையோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் வாழ்வாதாரத்தின் மீதும் குறி வைப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.
சம்பளக் குறியீட்டை நிறை வேற்றியதாலும், தொழில்வழி சுகாதாரம், பாதுகாப்பு, வேலைச் சூழல் குறியீட்டை அறிமுகம் செய் ததாலும், தகவல் உரிமைச் சட் டத்தை முடக்கும் வகையில் அதை திருத்தியதாலும், சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொடுமையான, பழி வாங்கும் வகையில் திருத்தியதாலும், அரசி யல் சட்டத்தின் 370ஆவது பிரிவை காஷ்மீர் மக்களின் கருத்தறியா மல், அவர்களுக்கு வாய் பூட்டு போட்டு விட்டு கிழித்தெறிந்ததா லும், தேசிய குடிமக்கள் பதிவு வழி யாக பல லட்சக்கணக்கான மக் களை வீடில்லாமல், தேசமில்லா மல் ஆக்கியதாலும் இதுவரை இல் லாத அளவுக்கு ஜனநாயக விரோத மாக மோடி அரசு நடந்து கொண்டி ருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவு என்ற பெயரால், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களை பிளவு படுத்தி, மதத்தின் அடிப்படையில் மக்களை தேசம் இல்லாதவர்கள் ஆக்கிவிடும் வன்முறை விரிவடை கிறது. எனவே, தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பேரழிவு செயலை, ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தால் எதிர்கொள்ள வேண்டும். நவம்பர் முதல் வாரத் தில் ஈரோட்டில் நடைபெறும் மண் டல அளவிலான வேலை நிறுத்த தயாரிப்பு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் நான்கு பிரதி நிதிகள் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், தெலுங்கானா மாநிலத் தில் ஊதிய உயர்வு கோரி போராடி வரும் போக்குவரத்து தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கை களை உடனே நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், மோட்டார் சங்க செயலாளர் வி.எஸ்.சசிகுமார், சிஐடியு மாவட் டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டப் பொருளாளர் டி.குமார், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் டி.ஜீவா சிதம்பரசாமி, மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் ஆர்.ரங்கசாமி, ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் தலைவர் அ.பெருமாள், செயலா ளர் அ.சிவசாமி, எம்எல்எப் மாவட் டச் செயலாளர் வி.பான்டியரா ஜன், பனியன் சங்க செயலாளர் எம்.மனோகரன், மு.சம்பத், எச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் ஆர். முத்துசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.