tamilnadu

திருப்பூர் ,தாராபுரம் முக்கிய செய்திகள்

குண்டடம் சி.கருப்புசாமி காலமானார் 

திருப்பூர், ஜூலை 9 – திருப்பூர் மாவட்டம் குண்டடத்தைச் சேர்ந்த, தீக்கதிர் முகவரும், சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவருமான சி.கருப்புசாமி (72)  உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாயன்று கால மானார். தோழர் சி.கே. என அனைவராலும் அன்புடன் அழைக் கப்படும் சி.கருப்புசாமி ஆரம்பத்தில் தாராபுரம் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா குழு உறுப்பி னராக செயல்பட்டிருக்கிறார். தீக்கதிர் நாளிதழ் குண்டடம் முகவராக பணியாற்றி னார். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவராக முனைப்புடன் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கங்களில் தவறாது பங்கேற்று வந்தார். கடந்த சில  வாரங்களாக உடல்நலக் குறைவுடன் இருந்த சி.கருப்பு சாமி செவ்வாயன்று காலமானார். தகவல் அறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் உள்பட மார்க்சிஸ்ட் கட்சி,  சிஐடியு சங்கத்தினர் அவரது  வீட்டுக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் செவ்வா யன்று பிற்பகல் 3 மணி யளவில் கொடுவாய் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய் யப்பட்டது.

தாராபுரம் தாலுகாவில் மணல் திருட்டை தடுக்க குழு அமைப்பு

சார் ஆட்சியர் தகவல்
தாராபுரம், ஜூலை 9- தாராபுரம் தாலுகாவில் மணல் திருட்டை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக சார்  ஆட்சியர் தெரிவித்துள்ளார். தாராபுரம் அமராவதி ஆற்றுப்படு கைகளான சங்கராண்டாம்பாளையம், வீராட்சிமங்கலம், புதுப்பை, ஆத்துக்கால் புதூர், கவுண்டையன்வலசு, தாளக்கரை,  ஏரணமேடு, கொங்கூர், உப்புத்துறை பாளையம் பகுதிகளில் ஆற்று மணல் திருட்டுத்தனமாக கடத்தப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சார் ஆட்சியர் பவன் குமார் தெரிவிக்கையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர், பொதுப் பணித்துறையினர் அடங்கிய மணல் திருட்டு தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முறையாக கிராமங்களில் ரோந்து பணியை மேற்கொள்ளும். மேலும் மணல் திருட்டிற்கு ஆதரவாக ஆற்றுப்படுகை பகுதியில் வழித்தடம் அமைக்க உதவும் நில உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் இருந்து மண்  எடுப்பது முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது. செங்கல் சூளைக்கோ அல்லது  விவசாய நிலத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கோ  மண் எடுத்து செல்ல முறை யான உரிமம் பெற்றிருக்க வேண்டும். தரிசு நிலம் என்றாலும் மண் எடுத்து செல்ல அனுமதி பெற்று எடுத்து செல்லவேண்டும். கொங்கூரில் ஒரு விவசாயி நிலத்தில் இருந்து அனுமதி பெறாமல் அதே விவ சாயின் மற்ற நிலத்திற்கு மண் கொண்டு செல்வது கண்டறியப்பட்டு ரூ.50 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், விவசாயிகளும் கனிம  விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என சார் ஆட்சியர் தெரிவித் துள்ளார்.